நீங்கள் ஒரு நாள் காலை எழும் போது முன்பொருபோதும் கண்டிராத மிகப்பெரிய தொழிற்சாலையொன்றில் எழுதுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆயிரக்கணக்கான மக்கள் அத்தொழிற்சாலையில் வேலை செய்வதாக நீங்கள் காண்கிறீர்கள். இத்தொழிற்சாலையில் கதவுகள், யன்னல்கள் எல்லாம் தாழிடப்பட்டு இருக்கின்றன.
இத்தொழிற்சாலையில் மக்கள் வேலை செய்கிறார்கள்,தூங்குகிறார்கள்.இப்படியே இதனுள்ளேயே அவர்கள் தமது காலங்களை கழிக்கிறார்கள்.
இது போன்ற ஒரு நேரத்தில் உங்கள் மனதில் என்ன தோன்றும்?
“இந்நேரத்தில் இத்தொழிற்சாலையினுள் நான் இருக்கிறேன். நானும் மற்றவர்களுடன் சேர்ந்து வேலைகளை செய்ய வேண்டும்.” என்று நீங்கள் நினைக்கலாம்.
அல்லது உங்களுக்கு இப்படி ஒரு எண்ணமும் தோன்றலாம்.
நான் இந்த இடத்திற்கு எவ்வாறு வந்தேன்? இத்தொழிற்சாலைக்கு வெளியில் என்ன இருக்கிறது?நான் எந்நோக்கத்திட்காக இத்தொழிட்சாலையினுள் இருக்கிறேன்?. என்னுடைய தெரிவேதும் இல்லாமல் நான் இவ்விடத்தில் கண் விழித்தது ஏன்?
இவ்வாறான எண்ணங்கள், பூமியில் வாழும் நாம் எங்களுடைய உருவாக்கம் சம்பந்தமாக எங்கள் மனதில் எழக்கூடிய எண்ணங்களுக்கு ஒத்தனவாகும். மனிதர்களாகிய நாம் எம்முடைய சுய தெரிவுகள் ஏதுமின்றி இப்பூமியில் உருவாக்கப்பட்டிருக்கிறோம். “நான் எங்கிருந்து வந்தேன் ? ,நான் இவ்வுலகில் என்ன செய்கிறேன்? இறப்பின் பின் நான் எங்கு செல்வேன்? போன்ற பலவாறான கேள்விகள் ஏற்கனவே உங்கள் மனதில் தோன்றியிருக்கலாம்.
அறிந்தோ அறியாமலோ மனிதன் இவ்வுலக மாயைகளில் அகப்பட்டு வாழ்ந்து கொண்டிருப்பதனால் இவ்வாறான கேள்விகளுக்கு விடை தேடுவதில் மனிதன் தனது சிந்தனையை செலுத்துவது அரிதாகவே காணப்படுகின்றது.இவ்வாறான அடிப்படையான கேள்விகளை கருத்திற்கொள்ளாமல் புறக்கணிப்பதற்கு மனிதன் பழக்கப்பட்டிருக்கும் அதே நேரம் இவ்வாறான கேள்விகளிலிருந்து தப்பித்துக்கொள்வது அவனுக்கு இயலுமானதாகவும் இல்லை.
அல்குரான் இது சம்பந்தமாக இவ்வாறான குறிப்பொன்றை தருகிறது.
நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” [அல்குரான் 3:190,191]
இங்கு “நோக்கம்” எனும் வார்த்தை ஆழமானதொரு கருத்தைத் தருகின்றது.நாம் இப்பொழுது சிந்திக்க வேண்டிய விடயம் “எமது வாழ்க்கையின் நோக்கம் என்ன?” என்பதாகும். இங்கு நோக்கம் என்பதன் மூலம் கருதப்படுவது இவ்வுலகம் சார்ந்த நோக்கங்கள் அல்லாமல் மனிதன் தனது பிறப்பு முதல் இறப்புவரை வாழ்வதற்கான நோக்கம் ஆகும்.
இஸ்லாம் இந்நோக்கத்தை இரு அடிப்படைகளை கருத்திற்கொண்டு விளக்குகின்றது.
- இவ்வுலகை படைத்த ஒரு படைப்பாளன் இருக்கிறான் என ஏற்றுக்கொள்ளுவது அறிவுடைமையானதாகும்.
- அல்குரான் இப்படைப்பாளன் மூலம் முழு மனித குலத்திற்கும் வழங்கப்பட்டிருக்கும் வேதம் என ஏற்றுக்கொள்வதாகும்.
போன்ற இரு அடிப்படைகளை கருத்திற்கொண்டு இஸ்லாம் “வாழ்வின் நோக்கம் என்ன?” என்பதனை விளக்குகின்றது.
இவ் இணையத்தளத்தில் படைப்பியல் எனும் பகுதியில் இவ்வுலகை படைத்தவன் ஒருவன் இருக்கிறான் எனும் யதார்த்தத்தை காரணங்களுடன் விளக்கமளிக்கப்படுகின்றது. அதே போன்று வியப்பூட்டும் திருக்குர்ஆன் எனும் பகுதியில் படைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்பதை பலமான ஆதாரங்கள் மூலம் விளக்கமளிக்கப்படுகின்றது.
“வாழ்வின் நோக்கம் என்ன?” எனும் அடிப்படையான கேள்விக்கான பதிலும், அந்நோக்கத்தை விளக்கும் இஸ்லாமிய மார்க்கம் எக்காரணங்களால் சத்திய மார்க்கம் என நம்பப்படுகின்றது போன்றவை சம்பந்தமானவை “அழைப்பு” எனும் பகுதியில் விளக்கமளிக்கப்படுகின்றது.
இவ்வுலக மாயைகளிலிருந்து விடுபட்டு ஆன்மீக ரீதியில் அடிப்படையானதும்,முக்கியமாதுமான பல விடயங்களை உங்கள் அவதானத்தை செலுத்த நீங்கள் தயாரா? ஆம் எனில் “Purpose” இணையயத்தளம் உங்களுக்கு பிரயோசனமானதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.